More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா?; இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவும்
தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா?; இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவும்
Feb 24
தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா?; இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவும்

படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவதிலும் ஏராளம்...



ஆக, தூக்கம் வராமல் தவிப்பது சர்வதேச பிரச்சினையாக இருக்க, அதற்கான தீர்வும் பல்வேறு நாடுகளிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.



அவ்வகையில், இந்தியாவில் உள்ள அறிவியலாளர்கள் கருஞ்சீரகத்தில் பல நன்மைகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளார்கள். கருஞ்சீரகம், மன அழுத்தத்தைக் குறைத்து, சீக்கிரம் தூக்கம் வரவும், நீண்ட நேரம் நிம்மதியாக தூங்கவும் உதவுதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



அதேபோல, தூக்கம் வர உதவும் சில உணவு வகைகள் குறித்துப் பார்க்கலாம்...



பாதாம்: பாதாமில் melatonin என்னும் ஹார்மோனும், தூக்கம் வர உதவும் மக்னீசியம் என்னும் தாதுப்பொருளும் உள்ளன. இந்த Melatonin உடல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்தி உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.



வான்கோழி: வான்கோழிக்கறியில் tryptophan என்ற அமினோ அமிலம் பெருமளவில் உள்ளது. அது தூங்குவதற்கு உதவும் melatonin உருவாக உதவுகிறது.



சாக்லேட்: சாக்லேட் ரிலாக்ஸ் ஆக உதவும் endorphin என்னும் ரசாயனம் உருவாக உதவுகிறது. அத்துடன் கொக்கோவிலும் தூக்கத்திற்கு உதவும் tryptophan உள்ளது.



பூசணி விதைகள்: மக்னீசியமும் துத்தநாகமும் நிறைந்த பூசணி விதைகள் தூக்கத்தை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவற்றிலுள்ள உயர் புரதம் இரவு முழுவதும் தூக்கத்திலிருந்து எழும்பாமல் தூங்க உதவுகிறது.



தூக்கத்துக்கு உதவும் அடுத்த உணவின் பெயரைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்...



ஆம், வெள்ளை அரிசி சாதம்: வெள்ளை அரிசி சாதம் முதலான உணவுகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரிக்கின்றன. தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்பு அரிசி சாதம் சாப்பிடுவது நன்றாக தூக்கம் வர உதவி செய்யும்.



தேன்: தூங்கச் செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் அருந்திவிட்டு தூங்கச் செல்வது தூக்கம் வர உதவி செய்யும். அதாவது, நம்மை விழிப்புடன் இருக்க உதவும் orexin என்ற ரசாயனத்தின் அளவை இந்த தேனிலுள்ள குளுக்கோஸ் குறைக்கிறது. ஆகவே, தேன் அருந்திவிட்டு படுக்கைக்குச் சென்றால், படுத்தவுடன் தூக்கம் நன்றாக வரும்.



இதுபோக, மேலை நாடுகளில், காலை உணவாக பயன்படுத்தும் Cereal, கிவி பழம், செர்ரி பழச்சாறு, லெட்டூஸ், யோகர்ட் ஆகியவையும் தூக்கம் வருவதற்கு உதவும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.



எனவே, இந்த உணவு வகைகளில் எதையாவது தூங்கச் செல்லும் முன் உட்கொள்வது, நல்ல தூக்கம் வர உதவும்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
May09

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத

Oct13

வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.

Feb03

உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்

Jan27

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்

Mar15

இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப

Mar08

பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன

Mar23

சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க

Feb24

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை

Mar22

இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்ச

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

May04
Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

Oct21

கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து

Mar11

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்

Feb14

பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்