Feb
24
ப்பா... அந்த பைக் ஃபைட் இருக்கே.. வலிமை முதல் நாள் முதல் காட்சி பார்த்து பிரமித்து போன பிரபல நடிகர்!
வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பிரபல நடிகர், படத்தை அஜித்தின் வலிமை படத்தை பார்த்துள்ள நடிகர் அருண் விஜய் பாராட்டி தள்ளியுள்ளார்.இன்ச் பை இன்ச்சாக பாராட்டியுள்ளார்.
அஜித், ஹெச் வினோத், போனி கபூர் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் மூன்றாண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் இன்று வெளியாகியுள்ளது. காலை 4 மணிக்கே தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்கான முன்பதிவுகள் கடந்த வாரமே முடிந்து தீர்ந்த நிலையில் இன்று காலை வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது.
படத்தின் ரிலீஸை முன்னிட்டு திரையரங்க வாயில்களில் வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும், தியேட்டர் வாசல்களில் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.