உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அனுப்பமுடியும். அதற்கான முழு விவரம் மற்றும் விதிமுறைகள் இதுதான் வேலை அல்லது படிப்பு தொடர்பாக பல நேரங்களில் நாம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
அந்த சூழலில் பைக் அல்லது ஸ்கூட்டர்களையும் நம்முடனேயே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு, இந்திய ரயில்வே உங்களுக்கு உதவுகிறது. ரயில் மூலமாக பைக்கை கொரியர் அனுப்புவது சுலபமான ஒன்றுதான். கட்டணமும் குறைவு. ரயிலில் பைக் அல்லது ஸ்கூட்டரை எப்படி அனுப்புவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரயில்வே விதிமுறை!.
இந்திய ரயில்வே மூலமாக எந்தவொரு பொருளையும் கொண்டு செல்ல முடியும். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கையிலேயே எடுத்துச் செல்வது. மற்றொன்று பார்சல். இந்த சேவையில் (பார்சல்) நீங்கள் விரும்பும் இடத்திற்கு பொருட்களை அனுப்ப முடியும். ஆனால் அதனுடன் நீங்கள் பயணிக்க முடியாது.
உங்களுடைய பைக்கை பார்சல் அனுப்ப முதலில் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பார்சல் கவுண்டர் மூலம் பார்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும், அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். ஆவணங்களின் அசல் நகல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் வைத்திருக்க வேண்டும். சரிபார்ப்பின் போது அசல் நகல் தேவைப்படலாம். கடைசியாக பார்சல் செய்வதற்கு முன் உங்களுடைய பைக்கின் டேங்க் சரிபார்க்கப்படும்.