மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 35. பிரகாஷும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வகடந்த 2019 -ஆம் ஆண்டு இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மெதுவாக இளம்பெண்ணை கழற்றிவிட நினைத்த பிரகாஷ் அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார்.
இதனால், விரைவில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி இளம்பெண் பிரகாஷிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பிரகாஷ் மறுத்துவிட்டதோடு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவலநிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த போலீசார் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.