உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.35 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில்,
கடந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.35 லட்சத்தை தாண்டிவிட்டது.
அதற்கான பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,935,581 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 429,781,998 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 358,412,963 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 79,564 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன.
இந்த கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 80,366,697 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 71,377 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 966,393 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 2,420 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 52,442,363 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேபோல இந்தியாவை பொறுத்தவரை 42,880,507 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 13,476 பேர் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 512,954 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 302 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 25,772,807 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்