More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்திய கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இந்திய கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Feb 24
இந்திய கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய கடற்தொழிலார்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஜெ.கஜநிதிபாலனால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கடந்த 7ஆம் திகதி இரவு நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளை கைப்பற்றியதுடன், அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   



தொடர்ந்து குறித்த கடற்தொழிலாளர்கள் கடந்த 8 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் கடற்தொழிலாளர்களை 22ஆம் திகதிரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.



இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்படாத நிலையில் கடற்தொழிலாளர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.



இதன்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்தொழிலாளர்களிடம் கோவிட் தொற்று அச்சம் காரணமாக வாக்கு மூலம் பெறவில்லை எனவும், ஆகவே சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறும், அதுவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவானிடம் தமது விண்ணப்பத்தை கோரியிருந்தனர்.



இதனையடுத்து குறித்த 3 வழக்குகளின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான், கடற்தொழிலாளர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Jul30

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்

Jul18

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே

Oct18

புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

Jan26

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்

Jul23

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்

Feb27

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந

Oct01

புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்ட

Mar20

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ

Feb27

தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ

Feb16

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித

Oct31

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Aug03

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந