Feb
24
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு. படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இந்நிலையில் மாலை வழக்கமான பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன் குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயமடைந்த தெய்வேந்திரன் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், குபேந்திரன் என்பவர் ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்ட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று குபேந்திரன் உயிர் இழந்தார்.