சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் வகையில் தொடங்கிய ஒரு தொடர் வானத்தை போல.
துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்கள் மக்களிடமும் நல்ல அங்கீகாரம் பெற்றார்கள்.
ஆனால் திடீரென இவர்கள் இருவருமே தொடரில் இருந்து விலகினார்கள், புதிதாக நடிக்க வந்தவர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவரும் புதியதாக நடிக்க வருகிறார்.
புதிய நபர்கள் வந்தாலும் இந்த தொடரில் மட்டும் ஏன் இத்தனை மாற்றங்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.