More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • யுவராஜ் சிங்கின் உருக்கமான கடிதத்துக்கு நெகிழ்ச்சியான பதில் அளித்த விராட்கோலி!
யுவராஜ் சிங்கின் உருக்கமான கடிதத்துக்கு நெகிழ்ச்சியான பதில் அளித்த விராட்கோலி!
Feb 23
யுவராஜ் சிங்கின் உருக்கமான கடிதத்துக்கு நெகிழ்ச்சியான பதில் அளித்த விராட்கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், விராட் கோலிக்கு கிஃப்ட் கொடுத்து உருக்கமாக வெளியிட்ட கடிதம் இணையத்தில் வைராகி வருகிறது.



இந்த கடிதத்தில் கோலி கிரிக்கெட் விளையாட்டின் மீது வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு தொடங்கி இன்னும் சிலவற்றை பேசி நீண்ட புகழை பேசியிருந்தார். அதில், “நீ கிரிக்கெட்டில் எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.



இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் சேர்ந்து பயணித்த அந்த பொடிப்பையன் கோலி இன்று புதிய தலைமுறையையே வழிநடத்தும் ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறாய். உன்னுடைய உத்வேகம் மற்றும் ஆர்வம் ஆகியவை ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்திய அணி ஜெர்ஸியை அணிய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது.



மேலும், ஒவ்வொரு வருடமும் இந்திய கிரிக்கெட்டை வேறு ஒரு தரத்திற்கு நீ எடுத்துச்சென்றுள்ளாய். கேப்டன்சியில் ஜாம்பவானாக இருந்த உன்னை இனி பழைய ரன் சேஸிங் மிஷன் கோலி போன்று பார்க்க ஆவலுடன் உள்ளேன். உனது தோழனாக அணிக்குள் எப்போதும் இருந்திருக்கிறேன்.



ஆட்டம், பாட்டம், சமையல் என எத்தனையோ நினைவலைகள் உள்ளன. எனவே அப்போது இருந்த அதே நெருப்பு இன்னும் உன்னுள்ளேயே இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் நீ ஒரு சூப்பர் ஸ்டார் தான், நாட்டை பெருமைப்படுத்து என உருக்கமாக பேசியுள்ளார்.



இதற்கு பதிலளித்த விராட் கோலி, யு வி பா இந்த அற்புதமான கிஃப்ட் நன்றி. முதல் நாளிலிருந்து எனது தொழில் வாழ்க்கையை பார்க்கும் ஒருவரிடமிருந்து வந்ததற்கு நிறைய அர்த்தம் உள்ளது.



புற்றுநோயில் இருந்து மீண்டும் வந்த உங்களின் வாழ்க்கை எல்லா தரப்பு மக்களுக்குமே ஒரு உத்வேகத்தை கொடுக்கும். நீங்கள் யார் என எனக்கு தெரியும். எப்போது தாராள மனப்பான்மை கொண்டு உங்களை சுற்றியுள்ளவர்களிடம் அக்கறை கொண்டவர்.



அழகான இந்த புதிய பயணத்தில், நினைவுகளும் ஆசிர்வாதங்களும், கடவுள் யுவி பாவை ஆசிர்வதிப்பார் என்று மகிழ்ச்சியுடன் விராட்கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



விராட் கோலியும், யுவாராஜ் சிங் ஒரு சிறந்த நண்பர்கள் மட்டுமின்றி அண்ணன் தம்பி போல் பழகி கொள்வார்கள். 9 ஆண்டுகளாக இருவரும் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொண்டவர்கள். விராட் கோலியின் கீழ் யுவாராஜ் சிங் பல போட்டிகளில் விளையாடி வெற்றியை காண உத்வேகமாக இருந்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Sep19

மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள

May20

ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த

Nov10

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா

Jul11

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே

Mar08

ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு

May20

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Jul18

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக

Jul09

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே

Feb02

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க

Aug01

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,