விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மூத்த மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.
இவர் இந்த சீரியலில் ஜெனிபர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு சின்னத்திரை சமந்தா என்று செல்ல பெயரும் உண்டு.
இந்நிலையில், நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்விக்கு அழகாக பதிலளித்து வந்தார்.
அந்த வரிசையில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர் ஒருவர், திவ்யா கணேஷிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த நடிகை திவ்யா கணேஷ், விரைவில் எனக்கு திருமணம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், யார் மாப்பிள்ளை என்று தெரியவில்லை.
இதன்முலம் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷுக்கு திருமணம் என்பது முடிவு ஆகியுள்ளது.