தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட நிலையில், மூன்றாம் நாளான இன்று தங்கம் விலை குறைந்தும், வெள்ளி விலை அதிகரித்தும் விற்பனையாகிறது.
அதன்படி சென்னையில், இன்றைய தங்கத்தின் விலையானது ஒரு கிராம், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,735 ஆக ரூபாயாக குறைந்துள்ளது.
நேற்று இதன் விலை 4,735 ரூபாயாக இருந்தது. அதேபோல், நேற்று 38,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலை 5,116 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,101 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 40,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் அதே 120 ரூபாய் குறைந்துள்ளது.
அதன் விலையானது 40808 ரூபாய் ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,612 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,608 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,608 ஆகவும், கேரளாவில் ரூ.4,629 ஆகவும், தலைநகர் டெல்லியில் ரூ.4,612 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,608 ஆகவும், கோயம்புத்தூரில் ரூ.4,939 ஆகவும் உள்ளது.