தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிட்டபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கு ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் மூலம் 5529 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுக்குப் பின்பு இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
நேர்முகத் தேர்வு உள்ள குரூப் 2 தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன.