விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 5வது சீசன் வரை முடிந்துவிட்டது, இதுவரை கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார்.
புதியதாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தவிர்க்க முடியாத காரணத்தால் இனி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என வெளியேறிவிட்டார் கமல்ஹாசன்.
அவருக்கு பதில் யார் வருவார் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில் சிம்பு நிகழ்ச்சியில் கமிட்டாகி இருப்பதாக சில தகவல்கள் தெரிவித்தன.
இன்று புரொமோ ஷுட் எடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நடிகர் சிமபுவின் புதிய லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதுதான் சிம்புவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான லுக்கா அல்லது வேறொரு விஷயத்திற்காக இந்த லுக்கில் அவர் உள்ளாரா என்பது தெரியவில்லை.
ஆனால் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.