பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாறை ஒன்றின் கீழ் இருந்து 80 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளள்னர்..
பாணந்துறை குற்ற விசாரணை பிரிவினரால் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மறைந்திருந்து பாரியளவு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானதென கூறப்படும் பணமே இவ்வாறு கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதென குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சலிதுவின் போதை பொருள் வர்த்தகத்திற்கு உதவும் பிரதான உதவியாளர் பணம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்த நபரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு அருகில் குருப்புமுல்ல விகாரையின் கற்பாறையின் கீழ் பாரிய அளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.