தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.
இதன்படி குறித்த கடிதத்தில் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியுள்ளமைக்கான காரணம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துரைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.