நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெற்றிபெற்று இருக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது என்று ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளுங்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் நூறு விழுக்காட்சி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும்.