ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
ரோஜா படத்தில் துளிர் விட்ட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை, ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களால் தற்போது வரை நனைத்து வருகிறது.
இவருக்கு ரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.
இந்தப் படத்திற்கு வைரமுத்து வரிகளில் ஏஆர் ரகுமான் மெட்டுப் போட்ட ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
ரோஜா படத்திற்காக வாங்கிய சம்பளம் வெறும் ஐந்தாயிரம் ரூபாயாம்.
ரோஜா படத்தில் ஏஆர் ரகுமான் இசை அமைத்தது மட்டுமல்லாமல் இதில் இடம்பெற்றிருக்கும் 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடலையும் பாடியிருப்பார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.