தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது தாவனியில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து தமிழ் பெண்களே பொறாமை கொள்வார்கள்.
குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட இவர், தற்போது வெகுவாக தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.
திரையுலகில் கவனம் செலுத்த தயாராகியுள்ள சினேகா...சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிகப்பு நிற தாவணியில் தலை நிறைய மல்லி பூ வைத்து புன்னகை பூக்க கியூட்டாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.