இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung) தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்கும் புகைப்படங்கள் சிலவற்றை தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அது குறித்த பதிவொன்றை பதிவிட்ட அவர்,
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வது தகவல் தொடர்புக்கு மாத்திரமல்ல நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கற்பதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் “எனது உச்சரிப்பு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்!” என மூன்று மொழிகளிலம் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung) இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பதவியேற்பதற்காக கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்தார். மேலும் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர், அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இலங்கையர்களுக்கு உரையாற்றும் வகையில் விசேட குறிப்பொன்றையும் பதிவிட்ட்டுள்ளார்.
அதேவேளை தாய்மொழியான தமிழ் மொழி பேசுவதைவிட வேற்றுமொழி பேசுவதையே நாகரீகமாக கருத்தும் பலர் இருக்கையில் அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் ஆர்வமுடன் தமிழை கற்றுவருவது குறிப்பிடத்தக்கது.