தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது
. மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.