உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் யுக்ரைனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர், இந்தியர்கள், மாணவர்கள் ஆகியோரை தற்காலிகமாக வெளியேறும்படி கிய்வ் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் தங்கியிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவித்து இந்த வாரத்தில் இரண்டாவது அறிவிப்பாக இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரக அறிக்கையில்,
உக்ரைனில் தொடர்ந்து நிலவும் பதற்றங்கள், நிச்சயமற்ற நிலைகளைக் கருத்தில் கொண்டு, தங்குவதற்கு அவசியமில்லாத அனைத்து இந்திய நாட்டவர்களும், அனைத்து இந்திய மாணவர்களும் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உக்ரைன் - இந்தியா இடையில் குறிப்பிட்ட நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் சிறப்பு விமானத்திற்கான அப்டேட் குறித்துத் தெரிந்துகொள்ள மாணவர் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், தூதரக பேஸ்புக், இணையதளம் மற்றும் ட்விட்டரை பக்கங்களை செக் செய்யுங்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.