More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகினர்
பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகினர்
Feb 21
பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகினர்

ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் லலிதானந்த்.



இந்தப்படத்தில் இடம்பெற்ற 'அது ஒரு காலம் அழகிய காலம்' பாடல் மிக பிரபலம். 47 வயதான இவரின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பாடலாசிரியர் லலிதானந்த், இயக்குநர் கோகுலில் ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமார், காஷ்மோரா படங்களிலும், லோகேஷ் கனகராஜின் மாநகரம், சேரனின் திருமணம், விஜய் சேதுபதியின் ஜூங்கா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.



இதில் விஜய் சேதுபதியின் 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமார்' பாடல்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் படு பேமஸ்.



இதனை தொடர்ந்து கோகுல் சிம்புவை வைத்து இயக்கவுள்ள 'கொரோனாகுமார்' படத்திலும் பாடல்கள் எழுதி இருந்தார்.



நீண்ட நாட்களாக சிறுநீரக செயலிழப்புக்காக டையாலிஸில் சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்திற்கு ஏற்கனவே மாரடைப்பும் எற்பட்டிருக்கிறது.



அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார் லலிதானந்த்.



இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார் லலிதானந்த். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக

Jan25

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்

Dec30

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப

Jan16


ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்

Feb21

விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி

Feb15

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'

Jun11

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

May26

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத

Feb01

நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி

Jun08

ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ

Sep10

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்

Aug25

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந

Nov02

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட

Mar10

இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந