இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீடியோ இயக்கியுள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய வாழ்நாள் கனவு நனவானதாக இதயபூர்வமான நீண்ட பதிவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பல வருடங்களுக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு என் அம்மாதான் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்தார் ... அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததால், என்னால் அங்கு எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய வசதி இருந்தது.
ஒருமுறை டுவைன் பிராவோவிடம் அவர் தமிழில் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். நான் அவளிடம் கேட்டு எப்படியாவது பார்க் ஷெரட்டன் ஹோட்டலின் ஒரு மூலையில் நின்று எனது ஆஸ்தான தோனியைப் பார்ப்பது வழக்கம்.