பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகிழ்வித்து வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கடந்தாண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவரது மறைவு சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மறைவுக்கு பின்பும் இன்றும் ரசிகர்கள் மனதில் தனது பாடல்கள் மூலம் வாழ்ந்து வருகிறார் எஸ்.பி.பி.
இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில், பாடலின் ரெக்கார்டிங் சமயத்தில் எஸ்.பி.பியின் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.