தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
வெளிவந்த நேரத்தில் இருந்து தற்போது வரை Youtubeல் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது அரபிக் குத்து.
இந்த பாடலை ரீல்ஸ் செய்து, நடனம் ஆடி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வீடியோக்களை தினம் தினம் வெளியிட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும், விஜய் போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா அட்லீ மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் மூவரும் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.