சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. அவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் தற்போது அதே சீரியலின் இரண்டாம் சீசனில் நடித்து வருகிறார்.
ஆல்யாவின் கணவர் சஞ்சீவும் சீரியல் நடிகர் தான். அவர்கள் ராஜா ராணியில் ஒன்றாக நடித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அதனால் அவர் விரைவில் சீரியலில் நடிப்பதற்கும் விடுப்பு எடுத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மிக இளமையான தோற்றத்தில் தான் இருக்கின்றார். அவரா இது என பலரும் அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.