More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
Feb 20
தமிழகத்தில் 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 



நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று 1000க்கு கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. 



சென்னையில் நேற்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் குறைந்து, 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 92 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது. 



இன்று ஒரே நாளில் 3,172 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,980 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,938 ஆக குறைந்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr06

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த

Sep12

ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

Jun22

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக

Mar25