ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அது யாராக இருக்கும் என்று தான் அனைவரும் யோசித்துக்கொண்டிருந்தனர்.
அதற்கான பதில் தற்போது கிடைத்துவிட்டது. கிடைத்திருக்கும் உறுதியான தகவல்களின்படி ஷாரிக் மற்றும் அபினை ஆகிய இருவரும் தான் இன்று எலிமினேட் ஆகின்றனர்.
மிக குறைந்த வாக்குகள் பெற்ற ஷாரிக் முதல் ஆளாக எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து அபினை எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தொகுத்து வழங்குவது இது தான் இறுதி வாரம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் முதல் வேறு ஒரு பிரபலம் வருவார் என தெரிகிறது.