More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வழி தவறி பயணித்த வான் விபத்து - 5 பேர் பலத்த காயம்
வழி தவறி பயணித்த வான் விபத்து - 5 பேர் பலத்த காயம்
Feb 20
வழி தவறி பயணித்த வான் விபத்து - 5 பேர் பலத்த காயம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் வான்  ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.



மாத்தறை - கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே அவர்கள் பயணம் செய்த வான் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.



இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மாத்தறை - கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.



வானில் 12 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



விபத்து இடம்பெறும்போது அனைவரும் நித்திரையில் இருந்ததாக, அதில் பயணம் செய்த ஒருவர் தெரிவித்துள்ளார்.



யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவ - பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள் வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.



வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட

Sep20

நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா

Mar07

கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங

Jul16

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 157 ப

Oct20

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ

Oct07

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Mar23

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர

Feb11

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Jan28

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந

Dec17

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத

Apr02

இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித

Jan15

இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்

Jan12

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0

Mar22

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க