More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Feb 19
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தும் திட்டத்தை காணொலி மூலம் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 



விவசாயிகளுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முயற்சியில் முதல் கட்டமாக 100 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது



மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு  லட்சம் விவசாய ட்ரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும், புதிய வாய்ப்புகளும் உருவாகும்.



இந்த துறையின் வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்யும். 21 ஆம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையில் இது ஒரு புதிய அத்தியாயம். இந்த ஆரம்பம் ட்ரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும். 



கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் பறக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவையாக இருந்தன. 



விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட இதுபோன்ற ட்ரோன்களை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr21

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி

Sep16

அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்

Aug07

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி

Jun27

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு

Sep16