பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டம் கொடூரமானது என்பதுடன், அரசியல் அமைப்பில் சில உறுப்புரைகளுக்கு மாறாக, தனி மனித உரிமைகளுக்கு எதிராக உள்ள சட்டம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டு ஏறத்தாழ 42 வருடங்கள் ஆகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.