நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இளம் பிரபலம்.
ஆரம்பத்தில் சின்னத்திரையில் தனது திறமையை காட்டி அதில் இருந்து வளர்ந்து இப்போது படங்கள் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் செய்து வருகிறார்.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் சாதனை செய்தது. கடந்த வருடம் வெளியான படங்களில் இந்த படம் டாப் 5 வசூலில் வந்தது.
அடுத்ததாக டான் திரைப்படம் ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். நடிகர் சூரி, சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களையும சூரி தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.