உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழாவின் போது, சடங்கு நிகழ்ச்சிக்காக கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்தனர்.
அதிக பாரம் காரணமாக பலகை உடைந்ததில் பெண்கள், சிறுமிகள் உள்பட 13 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த சடலங்களை மீட்டனர். இதில் 11 இறந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தை குஷி மாவடட நீதிபதி பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.