வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் பிரபலமான நடிகை வனிதா, பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வரும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் வனிதாவின் மகன் சினிமாவில் கால் தடம் பதிக்க போகும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்த நிலையில், அதன் பின்பு இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் காதலில் இருந்து அவரையும் பிரிந்தார். பின்பு பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து அதுவும் பிரச்சினையில் முடிந்தது.