பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிறது. இது ரசிகர்களுக்கு பெரிய மன கஷ்டத்தை கொடுக்கிறது.
அப்படி கடந்த ஜனவரி மாதம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் தனுஷ் தனது மனைவியை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
இருவரும் விவாகரத்து செய்தி அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் இப்படி செய்ய வேண்டாம் கஷ்டமாக இருக்கிறது என கமெண்ட் செய்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சில நாட்கள் கழித்து ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றியுள்ளார், ஆனால் இன்ஸ்டாவில் இன்னும் மாறவில்லை.
ஐஸ்வர்யா ஒரு பாடல் வீடியோ தனது குழுவுடன் இணைந்து உருவாக்குவது நமக்கு தெரியும். அந்த பாடல் வீடியோவின் சின்ன புரொமோ வெளியாக அதில் ஐஸ்வர்யா தனது பெயரைஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பதிவு செய்துள்ளார்.