More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • போர் பதற்றம் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
போர் பதற்றம்  உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
Feb 15
போர் பதற்றம் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. 



உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.



உக்ரைன் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது.



உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றதுடன், தங்கள் நாட்டு மக்களையும் உடனே நாடுதிரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளன.



இந்த நிலையில், உக்ரைனில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், தங்கள் நிலை மற்றும் இருப்பிடங்களை உக்ரைன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், உக்ரைனுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் எனவும் மத்திய அரசு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ

Mar06

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி

Mar11

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச

Jul20

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல

Mar06

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்

Jul08

பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ

Apr08

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ

Sep22

உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை

Sep04