தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது.
இரண்டாவது நாளாக ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ 1.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
அவரை வாங்க சென்னை அணியும் போட்டி போட்ட நிலையில் குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஏற்கனவே பிரபலமான தமிழக வீரர்களான அஸ்வினை ராஜஸ்தான் அணியும், நடராஜனை ஹைதராபாத் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஜெயந்த் யாதவையும் குஜராத் அணி வாங்கியுள்ளது.
இதனிடையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் அணி இமாலயதொகையாக ரூ 11.50 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.