More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பீரங்கிகளுடன் தயார் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்!
பீரங்கிகளுடன் தயார் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்!
Feb 14
பீரங்கிகளுடன் தயார் நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.



உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது.



இந்நிலையில், உக்ரைனுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் பாரிய இராணுவப்படையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கான சாத்தியம் அதிகரித்து வருவதால், மிகப்பெரிய போர் நடப்பதற்கான பதற்றமும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், ரஷ்ய இராணுவம் ன்பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் அதன் பிரம்மாண்ட படைகளை குவித்துள்ளது.



இதனை உறுதிப்படுத்தும் விதமாக கிரிமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்யாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை Maxar வெளியிட்டுள்ளது.



குறித்த படத்தில் பிராந்தியம் முழுவதும் புதிய படைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.



சிம்ஃபெரோபோலுக்கு வடக்கே கைவிடப்பட்ட விமான நிலையத்திற்கு 550-க்கும் மேற்பட்ட துருப்புக் கூடாரங்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் வந்துள்ளன.



டோனுஸ்லாவ் ஏரியின் கரையில் உள்ள Novoozernoye மற்றும் கிரிமியன் தீபகற்பத்தின் வடமேற்கு கடற்கரையில் உள்ள Slavne நகருக்கு அருகிலும் சமீபத்தில் அங்கு விரிவான பீரங்கி வரிசைப்படுத்தல் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளன.



பெலாரஸில், உக்ரைனின் எல்லையில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கோமலுக்கு அருகிலுள்ள சியாப்ரோவ்கா விமான நிலையத்தில் துருப்புக்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் புதிய வரிசைப்படுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது.



துருப்புக்கள் மற்றும் பல போர்க் குழுக்கள், உக்ரைனின் எல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ரெசிட்சா நகருக்கு அருகே களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.



உக்ரைனின் எல்லைக்கு கிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் உள்ள குர்ஸ்க் பயிற்சிப் பகுதிக்கு துருப்புக்கள் மற்றும் இராணுவப் படைகளின் ஒரு பெரிய அணிவகுப்பு வந்துள்ளது.



அப்பகுதிக்கு கூடுதல் உபகரணங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன, மேலும் துருப்புக்கள் மற்றும் உபகரணங்களுக்கு இடமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



ரஸ்யா எந்த நேரத்திலும் யுக்ரைனை ஆக்கிரமிக்கலாம். அத்துடன் தாக்குதலுக்காக ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் நேட்டோ பிராந்தியத்தின் "ஒவ்வொரு அங்குலத்தையும் தாம் பாதுகாக்கப்போவதாக” அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ரஸ்யா உக்ரைனுக்கு அருகில் 100000 துருப்புக்களைக் கொண்டுள்ளது.



அத்துடன் படையெடுப்பு ஒன்றுக்கு தயாராகி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது.உக்ரைன் எல்லையில் படைகளை குவிக்கும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்||Is  Russia going to war with Ukraine -DailyThanthiயுக்ரேன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம் - BBC  News தமிழ்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்

Mar04

உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர

Jan26

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Mar27

 உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க

May24

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங

Jun14

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Feb14

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும

Mar17

 மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்

Jun02

இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு

Sep28

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ

Oct01

வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த

Aug22

மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது

Apr20

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar08

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர

Jun18

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந