லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபரொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லெம்லியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த நபர் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது உடையில் தீ பரவியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.