விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் பாடி தனக்கென்று தனி அந்தஸ்தை உருவாக்கியவர் பிரியங்கா.
இவர் பாடிய ' சின்ன சின்ன வண்ண குயில்' பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.
சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜூனியர்களுக்கு துணையாக பாடினார் பிரியங்கா.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பாடி முடித்த பிரியங்காவிடம், தொகுப்பாளர்கள் மாகாபா மற்றும் மைனா நந்தியின் இருவரும் கலகலப்பாக உரையாடினார்கள்.
அப்போது பிரியங்காவை பார்த்து, 'சின்ன சின்ன வண்ண குயில்' எனும் ஒரே ஒரு பாடலை பாடி, ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தவர் பிரியங்கா என்று நந்தினி கூறியுள்ளார்.