More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இராணுவ வீரர்களை களமிறக்கும் திட்டத்தை அறிவித்தார் சவேந்திர சில்வா !!கோட்டாபயவின் விசேட ஆலேசானை!!
இராணுவ வீரர்களை களமிறக்கும் திட்டத்தை அறிவித்தார் சவேந்திர சில்வா !!கோட்டாபயவின் விசேட ஆலேசானை!!
Feb 13
இராணுவ வீரர்களை களமிறக்கும் திட்டத்தை அறிவித்தார் சவேந்திர சில்வா !!கோட்டாபயவின் விசேட ஆலேசானை!!

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள அனைத்து வயல்கள் மற்றும் பயிரப்படும் இடங்களுக்கு தலா ஒரு இராணுவ வீர் என்ற வகையில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



நாட்டின் பயிர் செய்கையை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. கமத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிப்பது முதல் அறுவடை செய்யப்படும் வரை அனைத்து உதவிகளும் இராணுவத்தினரால் வழங்கப்படும்.



கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இராணுவத்தினர்  வழங்கிய உயர் பங்களிப்பை போன்று விவசாயத்தை முன்னேற்றவும் இராணுவத்தினர் உச்சளவிலான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றனர்.



 மேலும்,

 இதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் ஜனாதிபதி  கோத்தபாய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.



விவசாயத்தை முன்னேற்ற பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள யோசனைகளும் இதன் போது கவனத்தில் கொள்ளப்படும்.வடக்கு, கிழக்கு உட்பட தெரிவு செய்யப்பட்டுள்ள பயிர் நிலங்களில் ஏற்கனவே இராணுவத்தினரை பயன்படுத்தி பல்வேறு பயிரிடும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம

Oct08

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய

Sep22

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு

Sep17

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில

Jun09

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர

Feb18

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு

Jun06

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக

Jun10

எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்

Oct21

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர

Oct25

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு

Apr02

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல

May22

இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த

Jul20

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

May02

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா