More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் பைடன், புடினுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் பைடன், புடினுக்கு எச்சரிக்கை!
Feb 13
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் பைடன், புடினுக்கு எச்சரிக்கை!

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. 



இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்தார். 



படைகளை உடனடியாக திரும்ப பெறுமாறும் புடினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அதிக மனித உயிர் இழப்புகள் ஏற்படும் என்று பைடன் குறிப்பிட்டார். 



ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்  உறுதியான பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அப்போது பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. 



எனினும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் புடின் நிலைப்பாற்றில் மாற்றம் ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்க மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 



இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட

Oct05

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க

Jul17

ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப

Apr01

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்

Jul25

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்

May04

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின

Mar25

உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற

Mar07

ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான

Feb02

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்

Mar03

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா

May27

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி

Mar04

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி

Sep18

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ

Jan20

தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ

Jan19

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன