நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மின் பிறப்பாக்கி செயற்பாட்டில் காணப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) வேண்டுகோள் விடுத்துள்ளார்