More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • 14 மணிநேரம் உருவாக்கப்பட்ட ராட்சத சாலையோர உணவு... கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்
14 மணிநேரம் உருவாக்கப்பட்ட ராட்சத சாலையோர உணவு... கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்
Feb 11
14 மணிநேரம் உருவாக்கப்பட்ட ராட்சத சாலையோர உணவு... கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமான சாலையோர உணவை வைத்து செய்யப்பட்ட சாதனைக்காக அந்த உணவு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



முட்டைகளைக் கொண்டு செய்யப்படும் அந்த உணவின் பெயர் ரோலெக்ஸ். இந்தச் சாதனையை உகாண்டாவைச் சேர்ந்த யூ-டியூபர் ரேமண்ட் கஹுமா மற்றும் 60 பேர் இணைந்து செய்துள்ளனர்.    



ஃபிரை செய்யப்பட்ட ஆம்லெட்டுன் மிருதுவான ரொட்டியில் காய்கறிகளை உள்ளே வைத்து பரிமாறப்படுவதுதான் ரோலெக்ஸ். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த உணவை கின்னஸ் சாதனைக்காக 2.32 மீட்டர் நீளமும் 0.66 மீட்டர் அடர்த்தியான விட்டமும் கொண்டதாக உருவாக்கியுள்ளனர். இதன் எடை மட்டும் 204.6 கிலோ!



இந்த உணவை அவ்வளவு எளிதாக அவர்களால் தயார் செய்துவிட முடியவில்லை. இதற்கு அவர்களுக்கு 14 மணி நேரம் 36 நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.



மாவு பிசைதல், வறுத்தல் மற்றும் முட்டைகளை உடைத்து ஆம்லெட்டாக்குதல் என அத்தனை பணிகளையும் சேர்த்து இத்தனை மணி நேரம் ஆனது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



கின்னஸ் சாதனைக்கு தயாராவதற்கு இவர்களுக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. கின்னஸ் சாதனையின்போது குளறுபடி நடந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கு முன்பே பல முறை முயற்சி செய்திருக்கின்றனர்.



இதுபோன்று இவர்கள் செய்த முயற்சியின்போது பல முறை ரொட்டியை சுருட்ட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கின்றனர். எனினும், கின்னஸ் சாதனையின்போது ஃபிலிம் உதவியுடன் அதை அழகாக சுருட்டி வெற்றி பெற்றிருக்கின்றனர்.



 204.06 கிலோ எடையில் ரோலெக்ஸ் உணவை தயார் செய்வதற்கு 72 கிலோ மாவு, 90 கிலோ காய்கறிகள், 1,200 முட்டைகள் தேவைப்பட்டிருக்கின்றன என்று கின்னஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

May25

8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள

Mar09

வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற

May24

இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள

Mar08

இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Jan20

கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு

Mar11

திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Mar06

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Jan19

அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி

Mar04

ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Mar08

பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை