பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு ரூ. 23 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர்.
இந்நிலையில், அதே போல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே சுமார் ரூ. 10 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் சங்கர்.
இந்த செய்தி தற்போது திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.