கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் பாதாள உலகக்குழு உறுப்பினனர் எனவும், 26 வயதான 'அப்bபா' (Abba) என்றழைக்கப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயில் உள்ள 'பாணந்துற சாலிந்த' என்ற நபருக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.