More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்!
சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்!
Feb 11
சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்த தமிழன்!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞர், உடலுறுப்பு தானம் செய்ததற்காக ஜனாதிபதி கைகளில் மதிப்புமிக்க விருதை பெற்றுள்ளார்.



சக்திபாலன் பாலதண்டாயுதம் எனும் 28 வயது இந்திய வம்சாவளி தமிழர், தனது கல்லிரலின் ஒரு பகுதியை, யாரென்றே தெரியாத ஒரு வயது சிறுமிக்கு தானம் செய்ததற்காக, “தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2021ம் ஆ ண்டின் சிங்கப்பூரார்” எனும் விருதைப் பெற்றுள்ளார்.



நேற்று (09ம் திகதி) சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து இந்த விருதைப் பெற்றார்.



ஜூலை 2020ல் சமூக ஊடகங்களில் ஒரு இளம் இந்திய தம்பதியரின் வேண்டுகோளுக்கு பதிலளித்த தண்டாயுதபாணி, தனது கல்லீரலில் 23 சதவீதத்தை 2020 செப்டம்பர் 30 அன்று ஒரு வயது குழந்தையான ரியாவுக்கு தானம் செய்தார்.



2019-ல் பிறந்த அந்த குழந்தை, பிறந்த சில வாரங்களில் பிலியரி அட்ரேசியா (biliary atresia) நோயால் பாதிக்கப்பட்டார். இந்த அரிதான நோய் கல்லீரலில் உள்ள பித்த நாளங்களை வீக்கமடையச் செய்து, பித்தப்பையில் பித்த ஓட்டத்தைத் தடுக்கிறது.



இந்த நிலை இறுதியில் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். சக்திபாலன் பாலதண்டாயுதத்தின் உடலுறுப்பு தனித்தலை பயனடைந்த சிறுமிரியா தற்போது தனது பெற்றோருடன் சிறப்பான வாழக்கையை வாழ தொடங்கியுள்ளார்.



அதேசமயம், சக்திபாலன் பாலதண்டாயுதம் (Sakthibalan Balathandautham) இப்போது உறுப்பு தானம் செய்வதற்கான ஒரு வழக்கறிஞராக இருக்கிறார், மேலும் பலரை ஊக்குவித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுகிறார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (STRAITS TIMES) நாளிதழ் தெரிவித்தது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb19

அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது

Feb09

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்

Feb14

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

May25

நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Jan24

கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று

Feb04

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி

Jan28

இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி

Mar05

கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Mar06

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Feb04

இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண

Mar06

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ