பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பொலன்னறுவை தொடக்கம் லங்காபுரை வரையிலான பணியாளர்களை தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் போது 23 பணியாளர்கள் அதில் பயணித்துள்ளனர் எனவும் அவர்களில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்