காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள எரிவாயுஅடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
இச் சம்பவம் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் மதியத்துக்கான சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தவேளை இவ்வாறு அடுப்பு வெடித்துச் சிதறியது.
எனினும் வீட்டுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் காரைநகர் பகுதியில் நிகழ்ந்த இரண்டாவது எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமாகும்.