முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என தெரிவித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அப்போது அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. ஆனால் அந்த கும்பலை எந்த அச்சமும் இன்றி எதிர்கொண்ட அந்த மாணவி அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாலனது.
இதைத்தொடர்ந்து கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து ஏபிவிபி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்தனர். இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே முஸ்லிம் பெண்களுக்கு தன்னுடைய ஆதரவை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஹிஜாப் பிரச்சினை இனியும் தொடர்ந்தால் நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரிகளுக்கு குரல் கொடுக்க ஹிஜாப் அணிவோம்.. 22 வருடங்களாக முஸ்லிம் நாட்டில் வாழ்ந்திருக்கிறோம்.. ஹிஜாப் அணிபவர்களிடம் அதை அகற்ற சொல்வது வலி மிகுந்தது. ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. எனக்கே அதை அணிய பலமுறை தோன்றியுள்ளது.